உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோடு சாலையில் அடிக்கடி விபத்து; வேகத்தடை அமைக்க கோரி மறியல்

தி.கோடு சாலையில் அடிக்கடி விபத்து; வேகத்தடை அமைக்க கோரி மறியல்

ராசிபுரம்: திருச்செங்கோடு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராசிபுரம் யூனியன், கூனவேலம்பட்டி ஊராட்சி, பாலப்பா-ளையம் கிராமம், திருச்செங்கோடு பிரதான சாலையில் அமைந்-துள்ளது. இப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. சாலை விரிவாக்கத்தின் போது வேகத்தடை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சில மாதங்-களுக்கு முன் நடந்த விபத்தை தொடர்ந்து, பொதுமக்கள் வேகத்-தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், பாலப்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன், நேற்று மாலை, 4:00 மணியளவில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபர், கணேசன் மீது மோதினார். காயமடைந்த கணேசனை மீட்டு, அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால், பாலப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாலை திடீரென திருச்செங்கோடு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசி-புரம் போலீசார், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறி-யலால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை