உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்டை மேலத்தெருவில் குப்பை குவியலால் சீர்கேடு

குட்டை மேலத்தெருவில் குப்பை குவியலால் சீர்கேடு

நாமக்கல், நாமக்கல், ராமாபுரம்புதுாரில் குட்டைமேலத்தெரு அமைந்துள்ளது. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அருகே இருக்கும் காலி இடத்தில், பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை கொட்டி குவிக்கப்படுகிறது. அவ்வாறு குவிக்கப்படும் குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுகின்னறனர். தற்போது பலநாட்களாக குப்பை குவிந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் குப்பையை அகற்றவில்லை.சில நேரங்களில் தீவைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகவும், துர்நாற்றமும் வீசுகிறது. அதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்று ஏற்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், கண்ணெரிச்சல், மூச்சடைப்பு உள்ளிட்டவையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கு குவிக்கப்படும் குப்பை குவியலை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை