அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
ராசிபுரம்: அம்பேத்கர் நினைவு தினம் டிச., 6ல் நாடு முழுவதும் அனுச-ரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ராசிபுரத்தில் தாழ்த்தப்-பட்ட, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னதாக, புதுப்பாளையம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், நக-ராட்சி சேர்மன் கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர்.அமைச்சர் வருகைக்கு முன்னதாக, அம்பேத்கர் சிலை முன் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த எம்.பி., ராஜேஸ்குமார், சாலையில் இறங்கி போக்கு-வரத்தை சரி செய்தார். வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கூறியதுடன், பொதுமக்களை சாலையோரம் அனுப்பி சரி செய்தார்.