உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு செயல்பாடுகள்கலெக்டர் ஆய்வு

அரசு செயல்பாடுகள்கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு, : திருச்செங்கோடு நகராட்சி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொளசி ஊராட்சிகளில் நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.மொளசி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, வீடுகள் ஒப்பந்த காலத்திற்குள் தரமானதாக கட்டி, பயனாளிகளுக்கு வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். சித்தாளந்துார் ஊராட்சிக்கு, ரூ.7.90 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள நெகிழி அரைக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, துாய்மை பணியாளருடன் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து கலந்துரையாடினார்.திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரி அருகில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய அமைவிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு நகராட்சி சேர்மேன் நளினிசுரேஷ்பாபு, தாசில்தார் விஜய் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி