மாணவர்களை ஏற்றாத அரசு பஸ் சிறைபிடிப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகர் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர், எஸ்.பி.பி., பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவ, மாண-வியர் தினமும் அரசு பஸ்சில் தான் பள்ளிக்கு சென்று வருகின்-றனர். நேற்று காலை, பள்ளிக்கு செல்ல, அன்னை சத்யாநகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த அரசு டவுன் பஸ், ஸ்டாப்பில் நிற்காமல் சென்றுவிட்டது. திரும்பி வந்தபோது, அந்த அரசு பஸ்சை அப்பகுதி மக்கள் சிறை பிடித்-தனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:நேற்று காலை, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்ல, அன்னை சத்யா நகர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். அங்கு வந்த அரசு டவுன் பஸ், மாணவர்களை ஏற்றிச்செல்ல நிற்-காமல் சென்று விட்டது. எஸ்.பி.பி., காலனி சென்று விட்டு, 10 நிமிடம் கழித்து மீண்டும் வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தோம். அப்போது, 'ஏன், பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்றீர்கள்; மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் நேரம்' என, தெரிவித்தோம். இதையடுத்து, அந்த பஸ்சில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, மீண்டும் எஸ்.பி.பி., காலனி பகுதிக்கு சென்றது.இவ்வாறு அவர்கள் கூறினர்.