மேலும் செய்திகள்
பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு | Breaking News
23-Apr-2025
நாமக்கல், கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கை குறித்து பேசினார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் பணி நியமனங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
23-Apr-2025