கோ-கோ போட்டியில் அரசு பள்ளி 2ம் இடம்
நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்ட அளவில், பெண்களுக்கான கோ-கோ விளையாட்டு போட்டி ஜூனியர், சீனியர் பிரிவு என, 2 பிரிவாக நடந்தது. சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த இப்போட்டியில் மொத்தம், 2 பிரிவிலும் சேர்த்து, 16 அணிகள் பங்கேற்றன. இதில் சீனியர் பிரிவில் நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி, 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சத்தியவதி, உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர், பெற்றொர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் மற்றும் இயக்குனர்கள் செந்தில், கிருஷ்ணன், அங்கு, மோகனசுந்தரம், ராமலிங்கம், தனபால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.