விவேகானந்தா மகளிர் கல்லுாரியில் மாணவியருக்கு பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு :திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் இன்ஜி., கல்லுாரி, விவேகானந்தா மகளிர் மேலாண்மை கல்லுாரிகள் பட்டமளிப்பு விழா, விவேகானந்தா கலையரங்கில் நடந்தது. சேர்மன் கருணாநிதி தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண்மை இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகநிதி, துணை தாளாளர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர்கள் விஜயகுமார், தேவி, மேலாண்மையியல் கல்லுாரி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் மாணவிகளின் சாதனைகளை தொகுத்து வழங்கினர்.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி அமைப்பு- சேர்மன் சீதாராம், 2023--24ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை படிப்பில் பல்கலை தரவரிசை பெற்ற, 25 மாணவியருக்கு பதக்கம், 831 மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கினார். அப்போது, ''மாணவர்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார். நிர்வாக இயக்குனர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், அட்மிஷன் இயக்குனர் சவுண்டப்பன், தேர்வாணையாளர் கண்ணன், திறன் மேம்பாட்டு இயக்குனர் குமரவேல், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.