மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில்திருவிழா கோலாகலம்
06-Apr-2025
ப.வேலுார்:-ப.வேலுாரில் பிரசித்தி பெற்ற புது மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் விழா கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 22ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு தீக்குண்டம் பற்றவைக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மதியம், 3:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற ஏராளமான ஆண் பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். பெண் பக்தர்கள், பூவாரி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கிடாவெட்டு, இரவு 7:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
06-Apr-2025