மேலும் செய்திகள்
சாய்பாபா கோவில் ஆண்டு விழா
25-Jun-2025
நாமக்கல், நாமக்கல், ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில், குரு பூர்ணிமா உற்சவம் கோலாகலமாக நடந்தது.நாமக்கல்-திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில், குரு பூர்ணிமா உற்சவ விழாவையொட்டி நேற்று காலை 6:30 மணிக்கு காகடா ஆரத்தி, 7:30 மணிக்கு கொடியேற்றம், 8:30 மணிக்கு பாபாவிற்கு மகா அபி ேஷகம் நடந்தது. பின் சாய் பஜன், மதியம் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பாபா தரிசனம், மாலை 4:00 மணிக்கு சாய் சத்ய நாராயண விரத பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.* சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில், நேற்று ஆனி மாத பவுர்ணமியையொட்டி குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. காலையில் குரு ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், மகாலட்சுமி, லட்சுமி நரசிம்மர், ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ராகு கேது பகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.பின் சத்திய நாராயண பூஜை, குங்கும அர்ச்சனை மற்றும் லட்சுமி குபேர பூஜை ஆகியவை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் குரு ராகவேந்திரா பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின் அன்னதானம் நடைபெற்றது.
25-Jun-2025