உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

ராசிபுரம், நவ. 12-ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று மாலை, ராசிபுரம் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பெட்டிக்கடை மற்றும் விஜயலட்சுமி திரையரங்கம் அருகே உள்ள பெட்டிக்கடை, சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள மளிகை கடை உள்ளிட்ட, 4 கடைகளில் புகையிலை, குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகையிலை விற்ற நபர்களுக்கு அபராதம் விதித்து, கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை