உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அருகே ஆலங்கட்டி மழை

ராசிபுரம் அருகே ஆலங்கட்டி மழை

ராசிபுரம் பகுதியில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை அவ்வப்-போது துாறல் மழை பெய்து வந்தது. இரவு, 7:00 மணிக்கு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ராசிபுரம் மட்டுமின்றி, நாமகிரிப்பேட்டை, சீராப்-பள்ளி, புதுப்பாளையம், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, அணைப்பாளையம் உள்-ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால், ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், புதுப்பா-ளையம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில், நேற்று இரவு ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. ஓட்டு வீடுகளில் சத்தம் கேட்டு வெளியே வந்து பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். சிலர் ஆலங்-கட்டியை பாத்திரத்தில் பிடித்து வைத்தனர். இரவு, 8:30 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை