உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையத்தில் கன மழை

குமாரபாளையத்தில் கன மழை

குமாரபாளையம், குமாரபாளையத்தில், இரவில் குளிர்ந்த சீதோஷணம் நிலவி வந்த நிலையில், பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில் திடீரென சூழ்ந்த கருமேகங்களால் மழை பெய்தது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், தெற்கு காலனி, குப்பாண்டபாளையம், சாணார்பாளையம், தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது.மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை