உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.பாளையத்தில் கன மழை சாலையில் தேங்கியதால் அவதி

ப.பாளையத்தில் கன மழை சாலையில் தேங்கியதால் அவதி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. பல இடங்களில் மழைநீர் சாலையில் சென்றது. ஒட்டமெத்தை, சந்தைப்பேட்டை பகுதியில், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்-டனர். 4 மணி நேரத்திற்கு பின், சாலையில் சென்ற மழைநீர் படிப்படியாக குறைந்தது.இன்னும் சிறிது நேரம் தொடர்ந்து மழை பெய்ந்திருந்தால், சாலையில் ஆறாக ஓடிய மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தி-ருக்கும் அபாயம் ஏற்பட்டது.தற்போது, பருவமழை தொடர்ந்து பெய்வதால், முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சீராக செல்லும் வகையில் வடிகால் அடைப்பை அகற்றிவிட்டு, வடிகாலை சீரமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ