பள்ளிப்பாளையத்தில் வெளுத்து கட்டிய மழை
பள்ளிப்பாளையம், :பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 5:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. இரவு, 7:00 மணி வரை தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் வெளுத்து கட்டிய மழையால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. கீழ்காலனி பகுதியில் தரைப்பாலத்தில் மேலே மழை நீர் ஆறாக சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.