உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைக்கவசம் அணியவிழிப்புணர்வு பேரணி

தலைக்கவசம் அணியவிழிப்புணர்வு பேரணி

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமகிரிப்பேட்டை இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில், மே தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஃஇந்நிலையில், நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்ஸ்பெக்டர் அம்பிகா, பேரணியை தொடங்கி வைத்தார். சங்க தலைவர் சங்கர், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் முனியப்பன், கவுரவ தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ