உயர் கோபுர மின் விளக்கு எம்.பி., துவக்கி வைப்பு
மோகனுார்: நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மோகனுார் தாலுகா, அணியாபுரம் என்.பி.எஸ்., நகரில், பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரனிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 29 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்காக பூமி பூஜை, நேற்று நடந்தது. எம்.பி., மாதேஸ்வரன் தலைமை வகித்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.அதேபோல், நெய்க்காரன்பட்டி பஸ் ஸ்டாப், மோகனுார் டவுன் பஞ்., காந்தமலை பாலசுப்ரமணியர் கோவில் அருகில், உயர்கோ-புர மின் விளக்கு அமைக்கவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா, 3.50 லட்சம் வீதம், மொத்தம், ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டது. அவற்றை, எம்.பி., மாதேஸ்வரன், மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.