உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடிப்படை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் மனு

அடிப்படை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் மனு

நாமக்கல்; கீழ் சோளக்காடு கிராமத்தில், அடிப்படை வசதி கேட்டு, மலைவாழ் மக்கள், நாமக்கல் கலெக்ட-ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கொல்லிமலை யூனியன், கீழ்சோளக்காடு கிரா-மத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால், இப்பகுதியில் அடிப்படை வசதிகளான, பொதுக்கழிப்பிடம், குடிநீர், கிணறு, விளையாட்டு மைதானம், திரு-மண மண்டபம் உள்ளிட்ட எந்தவிதமான வசதி-களும் இதுவரை செய்து தரவில்லை. மேலும், சோளக்காடு பகுதியில் தரிசு நிலம் உள்ளது. அங்கு, எங்கள் மலைவாழ் மக்களுக்கு தேவை-யான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி