உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டல் உரிமையாளர் லைசென்ஸ் பெற்று மயோனைஸ் விற்பனை செய்ய அறிவுரை

ஓட்டல் உரிமையாளர் லைசென்ஸ் பெற்று மயோனைஸ் விற்பனை செய்ய அறிவுரை

நாமக்கல்:'பேக்கரி, ஓட்டல்களில் லைசென்ஸ் பெற்று கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டைகளில் இருந்து, 'மயோனைஸ்' தயாரித்து விற்பனை செய்யலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து, 'மயோனைஸ்' தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மயோனைஸிலும் சேர்ந்து விடுவதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்டநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும், 'மயோனைஸ்' தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என, தமிழக அரசு, கடந்த ஏப்., 8 முதல் தடை விதித்துள்ளது.விதிமுறை மீறி, கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து, 'மயோனைஸை' தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தும், மயோனைஸ் பிரியர்களுக்கு மாற்று தேர்வாக, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மயோனைஸ் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்கு தடையில்லை.லைசென்ஸ் இல்லாமல் மயோனைஸ் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் மயோனைஸ் குறித்து ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற, 'வாட்ஸாப்' எண்ணில் புகாரளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை