உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் நீர்மின் திட்டப்பணி 2025 அக்.,ல் முடித்து உற்பத்தி துவக்கம்

கொல்லிமலையில் நீர்மின் திட்டப்பணி 2025 அக்.,ல் முடித்து உற்பத்தி துவக்கம்

நாமக்கல்: ''கொல்லிமலையில் அமைக்கப்பட்டு வரும், நீர்மின் நிலைய திட்ட கட்டுமான பணி, 2025 அக்டோபரில் முடிக்கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்கப்படும்,'' என, தமிழக சட்டசபை பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.தமிழக சட்டசபை பொது கணக்குக்குழுவினர், நாமக்கல் மாவட்-டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். அப்-போது, குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டியில், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், 50 பஸ்கள் நிற்கும் அளவிற்கு, நவீன கட்டமைப்பு வசதியோடு அரசு அமைத்துள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட், 20 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தர-மாகவும், நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.முதல்வரின் காலை உணவு திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தரமான அரிசி, பருப்பு காலை உணவு மிக அவசியம் என்பதால், இத்திட்டத்தை கலெக்டர் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டம் முடிக்கப்பட்டு, வரும், 2025 அக்டோபரில் பயன்-பாட்டிற்கு வரும். 20 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்-படும். வெற்றிகரமான நீர்மின் திட்டமாக இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், கலெக்டர் உமா, மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை