உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தென்னையில் காண்டா மிருக வண்டு பாதிப்பை கட்டுப்படுத்த யோசனை

தென்னையில் காண்டா மிருக வண்டு பாதிப்பை கட்டுப்படுத்த யோசனை

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், தென்னை மரத்தில் அதிகளவு காண்டா மிருக வண்டு தாக்குதல் காணப்படுகிறது. இதை தடுக்க, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா, யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதல் அறிகுறிகளான, முழு வளர்ச்சியடைந்த வண்டுகள், குருத்து இலைகளில் துளை-யிட்டு தாக்குகிறது. இதனால், குருத்து விரியும்போது முக்கோண வடிவிலான வெட்டுகள் இலைகளில் காணப்படும். வண்டுகள் மென்று எஞ்சிய மரச்சக்கைகள், அடிமட்டைகளின் இடையில் காணப்படும். இளந்தென்னைகளில் குருத்து பாகங்களை துளை-யிட்டு தாக்குவதால், குருத்திளைகள் வளர்ச்சி குன்றி, வளைந்-தொடிந்தும் மடிந்தும் விடுகின்றன.விரியாத பூக்குலைகளையும் இந்த வண்டுகள் தாக்குவதால், பாளைகள் அழுகி காய்ந்து விடும். இதை உடனடியாக கட்டுப்-படுத்துவது அவசியம். தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் மணல் இரு பங்கு கலந்து குருத்து பகுதியில் இட வேண்டும். வண்டுகள் மென்று மரச்சக்கைகள் வெளியேறிய துவாரங்களில் கம்பி அல்-லது சுளுக்கியால் வண்டுகளை குத்தி வெளியில் எடுத்துக்-கொன்று விட வேண்டும். நாப்தலின் உருண்டைகள் வைப்பதும் வண்டுகளை விரட்டி அடிக்க உதவும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை