புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், கல்யாணி பஞ்., பெரியதொட்டிபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா, கன்னூர்ப்பட்டி பஞ்., அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 16.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா, நேற்று நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமை வகித்தார். அட்மா குழு தலைவர் கவுதம் முன்னிலை வகித்தார். இதில், எம்.பி., ராஜேஸ்குமார், புதிய கட்டடங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். சேர்மன் சண்முகம், ராம்குமார், பி.டி.ஓ., முத்துலட்சுமி, சுதா, பொறியாளர் சாந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.