உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தக்காளி செடியை காப்பாற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தக்காளி செடியை காப்பாற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தக்காளி செடியை காப்பாற்றஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புநாமகிரிப்பேட்டை, நவ. 27-தக்காளி செடியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து, வேளாண்துறை உதவி இயக்குனர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது செய்தக்குறிப்பு: தக்காளியில் -ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு- முறையில், காய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு, 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். ட்ரைகோகிம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு, 50,000 ரூபாய் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதார சேதநிலை அறிந்து விடவேண்டும். காய்ப்புழுவிற்கு என்.பி.வி., வைரஸ் கலவை தெளிக்கவேண்டும்.புரொடீனியா புழுவிற்கு ஹெக்டேருக்கு கார்பரில், 1.25 கிலோ, நெல் தவிடு, 12.5 கிலோ, வெல்லம், 1.25 கிலோ, தண்ணீர், 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும். இதன் மூலம் பூச்சிகளில் இருந்து தக்காளியை காப்பாற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை