உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பாவை கல்லுாரி மாணவர்கள் இன்டெர்ன்ஷிப்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பாவை கல்லுாரி மாணவர்கள் இன்டெர்ன்ஷிப்

நாமக்கல், பாவை பொறியியல் கல்லுாரியின், சிவில் இன்ஜி., துறை மாணவ, மாணவியர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இப்பயிற்சி, 15 நாட்கள் நடக்கிறது. இதில், 20 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த இன்டெர்ன்ஷிப்பானது, வேலைவாய்ப்பிற்கும், புவியியல் தகவல் அமைப்பு, நெடுஞ்சாலை பராமரித்தல் போன்றவற்றை கற்றறிவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. பாவை பொறியியல் கல்லுாரி, மாணவ, மாணவியர் புத்தக அறிவு மட்டுமின்றி, அவர்களின் அனுபவம் சார்ந்த கல்வித்திறன்களை மேம்படுத்துவதில் தனிகவனம் செலுத்தி வருகிறது. அதற்காக பயிற்சிபெற்ற பேராசிரியர்கள், தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், இன்டெர்ன்ஷிப்கள், திறன் வளர் பயிற்சி மையங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை தொடர்ந்து வழங்கி, திறன்மிக்க, ஆளுமை நிறைந்த மாணவ, மாணவிகளை உருவாக்கி வருகிறது. இன்டெர்ன்ஷிப்பிற்கு தேர்வான மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுனவங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குனர்(நிர்வாகம்) ராமசாமி, இயக்குனர் (சேர்க்கை) செந்தில், பாவை பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ