உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி

மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்-ளியில், கடந்த, 13 ஆண்டுகளாக வேளாண்மை பாடப்பிரிவான தொழிற்கல்வி செயல்பட்டு வருகிறது. 2024---25ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பயிலும், 11 மாணவர்களுக்கு, கடந்த நவ., 26 முதல் நேற்று வரை, 10 நாட்களாக, பெரியமணலியில் உள்ள ஒரு நவீன விவசாய கருவிகள் விற்பனையகம் சார்பில் உள்ளுறை பயிற்சி நடந்தது.தலைமையாசிரியர் மாதேஸ்வரன், பாட ஆசிரியர் அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்காச்சோளம் விதைக்கும் கருவி, சோளம் மற்றும் தீவனம் அறுக்கும் இயந்-திரம், சொட்டுநீர் பாசனம், மழைத்துாவி பாசன அமைப்புகள், விசை தெளிப்பான், இனக்கவர்ச்சி பொறி, பஞ்சகாவியா, மீன் அமிலம், அக்னி கரைசல் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.மேலும், ஆட்டுப்பண்ணை, பட்டு வளர்ப்பு மையத்துக்கு நேரில் சென்று பயிற்சி மேற்கொண்டனர். களப்பணி சென்று மழைத்-துாவி அமைப்பை விவசாயி உதவியுடன் அமைத்தனர். தொடர்ந்து, ட்ரோன் மூலம் இயற்கை உரம், ரசாயன உரம், பயிர்க-ளுக்கு தெளிக்கும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி