உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இஸ்ரோவின் ஓவியப்போட்டி அரசு பள்ளி மாணவர் அசத்தல்

இஸ்ரோவின் ஓவியப்போட்டி அரசு பள்ளி மாணவர் அசத்தல்

வெண்ணந்துார், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமை பணியகம் கொண்ட இஸ்ரோ, 1969ல் உருவாக்கப்பட்டது. தற்போது, 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், 'இஸ்ரோ' நடத்திய, 'விண்வெளியில் வாழ்தல்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி வெண்ணந்துார் வட்டார அளவில் நடந்தது. இதில் பங்கேற்ற ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 8-ம் வகுப்பு மாணவர் பரணி முதலிடம் பிடித்தார். ராசிபுரம் அருகே, பாய்ச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை கல்லுாரியில் நடந்த பரிசளிப்பு விழாவில், சதீஷ் தவான் விண்வெளி மையத்தால் மாணவர் பரணிக்கு முதல் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி