உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு மக்களே அமைத்த தரைப்பாலம் அடித்துச்சென்ற பரிதாபம்

சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு மக்களே அமைத்த தரைப்பாலம் அடித்துச்சென்ற பரிதாபம்

கெங்கவல்லி: சுவேத நதி குறுக்கே, 4 லட்சம் ரூபாய் செலவில், மக்களே அமைத்த தரைப்பாலம், வெள்ளத்தில் அடித்துச்சென்றது.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உற்பத்தியாகும் சுவேத நதி, சேலம் மாவட்டம் தம்மம்-பட்டி, கெங்கவல்லி, வீரகனுார் வழியே செல்கிறது. தொடர் மழையால் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு, தெற்கு காட்டில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், சுவேத நதியை கடந்து கெங்கவல்லி வருகின்றனர்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் சுவேத நதி குறுக்கே, 4 லட்சம் ரூபாயில், மக்களே சிமென்ட் உருளையுடன், தற்காலிக தரைப்பாலம் அமைத்து ஆற்றை கடந்து சென்று வந்தனர். தற்-போது தொடர் மழையால் சுவேத நதியில் நேற்று வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டது. இதில் மக்கள் அமைத்திருந்த தரைப்பாலம் அடித்துச்சென்றது. இதனால் தெற்கு காட்டில் இருந்து கெங்கவல்-லிக்கு செல்லும் மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியர், 10 கி.மீ.,ல் உள்ள வலசக்கல்பட்டி மேம்பாலம் வழியே சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தெற்கு காடு மக்கள் கூறுகையில், 'சுவேத நதி குறுக்கே மேம்பாலம் அமைத்து தர பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதனால் தற்காலிக பாலம் அமைத்து பயன்படுத்-தினோம். தற்போது அதுவும் அடித்துச்சென்றதால், 10 கி.மீ., சுற்-றிச்செல்ல வேண்டியுள்ளது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ