களங்காணி பஸ் ஸ்டாப்பில் தேங்கும் மழை நீரால் அவதி
களங்காணி பஸ் ஸ்டாப்பில்தேங்கும் மழை நீரால் அவதிபுதுச்சத்திரம், அக். 1-புதுச்சத்திரம் அருகே, களங்காணி பஸ் ஸ்டாப் சர்வீஸ் சாலையில், தேங்கும் மழை நீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே, களங்காணி பஸ் ஸ்டாப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில், இரு பக்கங்களிலும் உள்ள கிராமங்களுக்கு செல்லும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமானோர் சென்று வரும் நிலையில், சர்வீஸ் சாலை மிகவும் தாழ்வாக உள்ளதால் சிறிய மழைக்கே இந்த சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.மேலும், இரவு நேரங்களில் மிக கனமழை பெய்தால் அதிகவில் மழை நீர் தேங்குவதால் டூவீலர்களில் செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, மழைநீர் தேங்கும் இந்த சார்வீஸ் சாலையை உயரப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.