உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச பூஜை

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச பூஜை

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழி-பாட்டு மன்றத்தின், 33ம் ஆண்டு கலச பூஜை, வேள்வி பூஜை, நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குருபூஜை, விநாயகர் பூஜை, ராஜராஜேஸ்வரி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 7:30 மணிக்கு சக்திகொடி ஏற்றப்பட்டது. காலை, 8:15 மணிக்கு கலச பூஜை, வேள்வி பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன், வேள்விக்-குழு நிர்வாகி கலைவாணி, மன்ற தலைவர் சகுந்தலாதேவி, துணைத்தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ