மேலும் செய்திகள்
காப்பு கட்டி கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
1 hour(s) ago
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் பால தண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.முருக கடவுள், சூரனை வதம் செய்யும் நிகழ்வை, கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கந்த சஷ்டி விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு சேந்தமங்கலம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோவிலில், முகூர்த்த கால் நடும் பணி துவங்கியது. முன்னதாக, கொடி மரத்திற்கு நவதானியங்கள், பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மேளதாளம் முழங்க, முகூர்த்த கால் நடப்பட்டது. பின், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.* நாமக்கல் அருகே, கூலிப்பட்டியில் கந்தகிரி பழனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, 19ம் ஆண்டாக சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கந்தபுரி பழனியாண்டவருக்கு, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், பழனியாண்டவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
1 hour(s) ago