உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

திருச்செங்கோடு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, நேற்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்பட்டது.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில், அர்த்தநாரீஸ்-வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா, திருவண்ணாம-லையில் நடந்து முடிந்து அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதி-கேசவப்பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது.அதை தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்-தது. இதையடுத்து, அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவபெருமாள் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்-பாலித்தனர். திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை