உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு காப்பு

லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு காப்பு

மோகனுார், நாமக்கல் மாவட்டம், மோகனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி பகுதியில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி தலைமையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வளையப்பட்டி சமுதாயக்கூடம் அருகே அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில், உரிய ஆவணங்கள் இன்றி, கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்திச்சென்ற, கரூர் மாவட்டம், கிழக்கு கோயம்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டனை, 36, கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, ஆறு யூனிட் மணலை டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை