உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கத்தியால் தாக்கியவர் கைது

கத்தியால் தாக்கியவர் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் சீனிவாசன், 38; வாழப்பாடி அடுத்த வேப்பி-லைப்பட்டிபுதுார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மகாலிங்கம், 39; இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் ஏற்பட்டது. மேலும், சீனிவாசனுக்கும், மகா-லிங்கம் மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக மகாலிங்கம் சந்தேகப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை நாவல்பட்டி காட்டூர் பகுதியில் இறைச்சி வாங்குவதற்காக சீனிவாசன் சென்றார். அப்போது, மகா-லிங்கம் தான் மறைத்து எடுத்து வந்த கத்தியால் சீனிவாசனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மங்களபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, மகாலிங்கத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை