உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிேஷகம்

அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிேஷகம்

ராசிபுரம், ராசிபுரத்தில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பொன்வரதராஜ பெருமாள் கோவிலின் உப கோவிலான இங்கு, சீரமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், இன்று கும்பாபி ேஷக விழா நடக்கவுள்ளது.யாகசாலைக்கு கடந்த 8ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. 27ம் தேதி சுதர்சன ேஹாமம் நடந்தது. பின்னர் புண்ணிய நதி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி நடந்தது. மதியம் மூலவர், நவமாருதி சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூலவர் விமானம் சால கோபுர கலச ஸ்தாபனம் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் ஸ்தாபன திருமஞ்சனம், அலங்காரம் ஆகியவை நடக்கிறது. 9:45 மணிக்கு மூலவர் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு கூட்டு பிரார்த்தனை, தீபாஞ்சலி, மந்திர புஷ்பாஞ்சலி முடிந்தவுடன், தீபாராதனை காட்டப்படும். நாளை முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை