ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேக விழா
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, மணலி ஜேடர்பாளையம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கருணாம்பிகை சமேத ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும், 7ம்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.கடந்த 27ல், முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா தொடங்கியது. வரும் 6ம் தேதி காலை, 7:00 மணி முதல் இரவு வரை விநாயகர் வழிபாடு, பாலிகை ஊர்வலம், வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரம், முதல் கால யாக துவக்கம், நாடிசந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 7ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு மங்களஇசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி துவக்கம், 6:45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடைபெறும்.