வக்கீல்கள் போராட்டம்
வக்கீல்கள் போராட்டம்ராசிபுரம், நவ. 23-ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து, ராசிபுரத்தை சேர்ந்த அனைத்து வக்கீல்கள் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நேற்று நடந்தது. அப்போது, வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.