உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொட்டிப்பட்டி அரசு பள்ளியில் நுாலக கட்டடம் திறப்பு

தொட்டிப்பட்டி அரசு பள்ளியில் நுாலக கட்டடம் திறப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே, தொட்டிப்பட்டி பஞ்சாயத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில் நுாலகத்திற்கு கட்டட வசதியின்றி மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, பள்ளி வளாகத்தில், மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் வகையில், சக்ரவர்த்தி ஸ்டடி அப்ராடு நிறுவனம் சார்பில், 10 லட்சம் ரூபாயில், நுாலக கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்., தலைவர் வேலுசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் லலிதா, விஷ்ணுபிரியா ஆகியோர், அனைவரையும் வரவேற்றனர்.நுாலக கட்டடத்தை, சக்ரவர்த்தி ஸ்டடி அப்ராடு நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், புதிய நுாலக கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கல்வெட்டை, இயக்குனர் ரவி திறந்து வைத்தார். இயக்குனர்கள் தனபாக்கியம், கண்ணகி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். நிகழ்ச்சியில், சரவணா சிட்டி டெவலப்பர்ஸ் சரவணகுமார், திருமுருகன், தர்மலிங்கம், முன்னாள் கீரம்பூர் பஞ்., தலைவர் அய்யாவு மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி