மேலும் செய்திகள்
கணவர் 2ம் திருமணம் போலீசில் மனைவி புகார்
07-Oct-2024
தேசிய நெடுஞ்சாலையில்லாரி கவிழ்ந்து விபத்துராசிபுரம், நவ. 3-கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில், 11 டன் மக்காச்சோளம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் நோக்கி டாரஸ் லாரி சென்றது. டாரஸ் லாரியை கள்ளக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன், 50, ஓட்டி வந்தார். ராசிபுரம் அடுத்த சேலம் -- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லுாரி மேம்பாலம் அருகே டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு எதிர்புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில், மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் கவிழந்து சிதறின. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Oct-2024