உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி, மது விற்ற 3 பேருக்கு காப்பு

லாட்டரி, மது விற்ற 3 பேருக்கு காப்பு

புதுச்சத்திரம்: ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடு-பட்டிருந்தனர். அப்போது, போலீசை பார்த்ததும் தப்பியோடிய-வரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பிள்ளாநல்லுாரை சேர்ந்த கூத்தநாடார் மகன் தங்கராசு, 55, என்பதும் தடை செய்-யப்பட்ட லாட்டரி விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், குருசாமிபா-ளையம் பாவடி அருகே, லாட்டரி விற்ற சுப்ரமணியம் மகன் சிவக்குமாரை, 49, போலீசார் கைது செய்தனர்.மேலும், குருக்கபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மது விற்பதாக தகவல் வந்ததை அடுத்து எஸ்.ஐ., சங்கீதா மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பெட்டிக்கடையில் வைத்து மது விற்ற குருக்கபுரத்தை சேர்ந்த முனியன் மகன் துரை-சாமியை, 65, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, ஒன்பது மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ