உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேறும், சகதியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர் பலி

சேறும், சகதியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர் பலி

மோகனுார் மோகனுார் தாலுகாவுக்கு உட்பட்ட மாடக்காசம்பட்டியை சேர்ந்தவர் பாலுசாமி, 70; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 16ல், தோளூர் - புதுப்பாளையம் சாலையில், மாடக்காசம்பட்டி அருகே, டி.வி.எஸ்., மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழையில் சாலை சேறும், சகதியுமாக காணப்பட்ட நிலையில், அதில் தடுமாறி கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை