உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-

மோகனுார், மோகனுார், எஸ்.வாழவந்தி கிராமம், மேலப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர், மாரியம்மன், பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த, 27ல் விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமத்துடன் விழா தொடங்கியது.தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மாலை, 4:00 மணிக்கு முளைப்பாரி அழைப்பும், முதல்கால யாக வேள்வி பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம், பூர்வாங்க பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு கோவில் கோபுரங்களுக்கும், தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை