உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

தேர் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்ற விழா நடந்தது. தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்து வருகிறது.நேற்று, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மதியம் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடந்தது. இரவு, மண்டகப்படி ஊர்வலத்தில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை, அம்மன் தேவஸ்தானம் புதுாரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நாளான புதன் கிழமை காலை, தீ மிதி விழாவும், மாலை தேர் திருவிழாவும் நடக்கிறது. சனிக்கிழமை மஞ்சள் நீராடல் விழாவுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி