உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையோரம் கழிவுநீர் குட்டை விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரம் கழிவுநீர் குட்டை விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நாமக்கல், எருமப்பட்டி யூனியன், வரகூர் பஞ்.,ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே, 300 மீ., தொலைவில் சாலையோரம் கழிவுநீர் குட்டை உள்ளது. இந்த குட்டையில், பஞ்., பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலக்கிறது. மேலும், மழை காலங்களில், மழைநீரும் சேர்ந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. சாலையோரம் உள்ள குட்டையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், மழை காலங்களில், மழைநீரும், கழிவுநீர் சேர்ந்து, சாலையை சூழ்ந்து கொள்ளும். அப்போது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.அதேபோல், வரகூரில் இருந்து நாமக்கல் செல்லும்போது, வளைவு பகுதியில் எவ்வித தடுப்பும், பாதுகாப்பும் இன்றி குட்டை அமைந்துள்ளதால், விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சாலையோரம் உள்ள குட்டையை மண் கொட்டி முழுமையாக மூடுவதுடன், போதிய தடுப்பு அமைத்து, பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை