ரூ.32 லட்சத்தில் 2 அங்கன்வாடி மையம்: எம்.பி., திறந்து வைப்பு
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, 24வது வார்டு செல்லாண்டியம்மன் கோவில் அருகிலும், 36வது வார்டு, சந்தைப்பேட்டைபுதுார் ஆலமரம் அருகிலும், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என, எம்.பி., ராஜேஸ்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா, 16 லட்சம் வீதம், மொத்தம், 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து, அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முழுமையடைந்தன. இந்நிலையில், 24 மற்றும் 36வது வார்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து, அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, அங்கிருந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தி.மு.க., தெற்கு நகர செயலாளர் ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் நந்தினி தேவி, இளம்பரிதி, செல்வக்குமார், விஜய் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.