உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு முதல்வருக்கு எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி

நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு முதல்வருக்கு எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி

நாமக்கல் : 'நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதற்கு, எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வருக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதேபோல், அரசாணை பெற உரிய பரிந்துரைகளை முறைப்படி அரசு விதிகளுக்குட்பட்டு அனுப்பிய மாவட்ட கலெக்டர், நகராட்சி தலைவர், ஆணையாளர், பொறியாளர் மற்றும் இதற்காக தீர்மானம் இயற்றிய நகராட்சி கவுன்சிலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நாமக்கல் மாநகராட்சி ஒட்டுமொத்தமாக, 145.31 சதுர கி.மீ., ஆகும். நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயரும்போது, புதிதாக வீட்டு மனைகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யும்போது, அதற்கான அரசு விதிமுறைகள் படி, அவை எளிதாக நடைமுறைப்படுத்தப்படும். சாலை, குடிநீர் வசதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, சுகாதார வசதிகள் இவை அனைத்தும், மாநகராட்சி என, தரம் உயர்த்தும்போது, அரசின் மானியம் நமக்கு அதிகம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை