உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டவுன் பஞ்சாயத்து துாய்மை பணிக்கு பேட்டரி வாகனம் வழங்கிய எம்.பி.,

டவுன் பஞ்சாயத்து துாய்மை பணிக்கு பேட்டரி வாகனம் வழங்கிய எம்.பி.,

நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து துாய்மை பணிக்கு, 7 பேட்டரி வாகனங்களை, எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார்.சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 15 வார்டுகளில் உள்ள வீதிகள், கடைவீதி, சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து குப்பைகளை சேகரிக்க டிராக்டர், மினி டெம்போ, கைவண்டி உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை, பெரும்பாலும் டீசலில் இயக்கப்படுகிறது. இதனால் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக அண்ணாநகர் புற மேம்பாட்டு திட்டத்தில், 13.81 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக, 7 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.இந்த வாகனங்களை நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செய-லாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் எம்.பி., துாய்மை பணி-யாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, டவுன் பஞ்., தலைவர் லோகாம்பாள், துணைத் தலைவர் செல்வ-ராஜூ, இ.ஓ., அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ