மா.கம்யூ., பேரவை கூட்டம்
எலச்சிபாளையம், எலச்சிபாளையத்தில், நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில் நடந்த ஒன்றியக்குழு பேரவை கூட்டத்திற்கு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஸ்தாபன அறிக்கை சம்பந்தமாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பேசினார். இதில், 100 நாள் வேலை திட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். வீட்டுமனை கேட்டு மனு அளித்துள்ள அனைவருக்கும் விரைந்து வீட்டுமனை வழங்க வேண்டும்.எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். வையப்பமலையில் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். எலச்சிபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்ப வேண்டும். ஜூன், 11 முதல், 20 வரை அனைத்து கிராமங்களிலும் மக்கள் நல கோரிக்கையை வலியுறுத்தி பிரசார பயணம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் சுரேஷ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.