முனிராஜா கல்வி நிறுவன மாணவர்கள் முதல்வர் கோப்பை போட்டியில் சாதனை
குமாரபாளையம் குமாரபாளையம் முனிராஜா கல்வி நிறுவன மாணவர்கள், முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முதல்வர் கோப்பை கேரம் போட்டியில், குமாரபாளையம் ஜே.கே.கே., முனிராஜா மருந்தியல் கல்லுாரி மாணவர்கள் யோகேஷ், குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், தனி நபர், இரட்டையர் பிரிவில், மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். முனிராஜா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜெய்ஆகாஷ், வெங்கடேஸ்வரன், யஷ்வந்த் ஆகியோர் சிலம்ப போட்டியில், 2 மணி, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி, உலக சாதனை படைத்துள்ளனர். திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், மாணவன் சுதர்சன் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், கட்டாவில் முதலிடம், குமித்தேவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முனிராஜா கல்விக்குழுமங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயப்பிரகாஷ், இயக்குனர்கள் ஸ்ரீநித்யா, கரண்ராஜா பார்மசி கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், சிலம்பம் ஆசிரியர் முகுந்தன் மற்றும் கராத்தே ஆசிரியர் பாஸ்கரன், பள்ளி முதல்வர் அர்ச்சனா ஆகியோர் பாராட்டினர்.