உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல்:நாமக்கல்-திருச்சி சாலை, பொன்விழா நகரில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏப்., 27ல் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அதை தொடர்ந்து, காப்பு காட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. 28ல் முதல் மே, 3 வரை தினமும் முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 4ல் தேரில் கலசம் வைத்தால், கரகம் பாலித்து சக்தி அழைக்கப்பட்டது. அன்றிரவு வடிசோறு படைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. 5 காலை மாவிளக்கு பூஜை, மாலை, 3:30 மணிக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்து. தொடர்ந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு மாரியம்மன் தேரில் ரதம் ஏறுதல், 9:00 மணிக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தல், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் வைபவம் நடந்தது. இன்று, முத்து மாரியம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், அம்மன் குடி புகுதல், கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பொன்விழா நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி