புரட்டாசி கடைசி சனிக்கிழமை தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்-சநேயர், தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.நாமக்கல் கோட்டை பகுதியில், ஒரே கல்லால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிக்கு, 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், திருமஞ்சள், சீயக்-காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்-சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு, கனகாபி ேஷகத்துடன் நிறைவு பெற்றது. அதையடுத்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.* சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறத்தில் அமைந்துள்ள சென்-றாயபெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. 12:00மணிக்கு, திருக்கோடி கம்பம் ஏற்றப்-பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் 4 மாடவீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடந்-தது. சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்-தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.* சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்-யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைப்போல நைனா மலை மலை உச்சியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்-டது.* நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா கணவாயில் ஆஞ்ச-நேயர் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் துளசி, வெற்றிலை மாலை, வடை மாலை அணிவித்து வழிபட்டனர். * பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரத்தில் அமைந்-துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில், திருப்பதி ஏழும-லையான் சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் காட்சியளித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.* ப.வேலூர் அடுத்த பாண்டமங்கலத்தில் உள்ள, பிரசன்ன வெங்-கட்ரமணசுவாமி கோவிலில், மூலவருக்கு பால், தயிர், திருமஞ்-சனம், கஸ்துாரி மஞ்சள், பச்சரிசி மாவு கரைசல், மஞ்சள், சந்-தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.